அம்மாபேட்டை, வெண்டிபாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு, கஞ்சா விற்ற 5 பேர் கைது
அம்மாபேட்டை, மொடக்குறிச்சி பகுதியில் லாட்டரி சீட்டுகள், கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
அம்மாபேட்டை, மொடக்குறிச்சி பகுதியில் லாட்டரி சீட்டுகள், கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடி அருகே உள்ள குள்ளனூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவி மூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் அதே ஊரை சேர்ந்த பழனிசாமி (50), கிருஷ்ணமூர்த்தி (21) ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவும், ரூ.100-ம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் குருவரெட்டியூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த பூலேரிக்காட்டை சேர்ந்த ராமன் (62) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி வெண்டிபாளையம் காலிங்கராயன் வாய்க்கால் பாலம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் மொடக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த ஈரோடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்த வரதராஜன் என்பவரது மகன் ஸ்ரீதர் (20), ஈரோடு பொய்யேரிக்கரை தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சாதிக் என்பவரது மகன் முகமது பாசில் (21), ஈரோடு புதுமை காலனி ஜீவானந்தம் வீதியை சேர்ந்த கருப்பணன் என்பவரது மகன் பார்த்திபன் (62) ஆகியோர் என்பவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து தலா 25 கிராம் அளவுள்ள 200 கிராம் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.