முழு ஊரடங்கு எதிரொலி: சேலத்தில் ஒரே நாளில்ரூ6¾ கோடிக்கு மது விற்பனை

சேலத்தில் ஒரே நாளில்ரூ6¾ கோடிக்கு மது விற்பனை

Update: 2021-04-25 22:44 GMT
சேலம்:
முழு ஊரடங்கு எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.6¾ ேகாடிக்கு மதுபானம் விற்பனை ஆகி உள்ளது.
முழு ஊரடங்கு
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 220 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினமும் ரூ.5 கோடி வரையில் மது விற்பனை நடைபெறும். அதேநேரத்தில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் மது விற்பனை இருமடங்கு உயரும். 
இந்த நிலையில், நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்தது.
ரூ.6¾ ேகாடி
சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு சிலர் கூடுதல் மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றதை காணமுடிந்தது.
இதனால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.6 கோடியே 88 லட்சத்திற்கு மது விற்பனை நடந்ததாகவும், இன்று (திங்கட்கிழமை) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அம்பாயிரநாதன் தெரிவித்துள்ளார். 
கொரோனா கட்டுப்பாடு காரணமாக இன்று முதல் டாஸ்மாக் பார்கள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்