மேச்சேரி அருகே கொரோனாவுக்கு பா.ம.க. நிர்வாகி பலி
கொரோனாவுக்கு பா.ம.க. நிர்வாகி பலி;
மேச்சேரி:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவர், பா.ம.க.வில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி அமைப்பு செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும், மேச்சேரி ஒன்றியக்குழு முன்னாள் கவுன்சிலராகவும் இருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ராஜாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜா திடீரென இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள், பா.ம.க.வினர் பெரும் சோகம் அடைந்தனர். இதையடுத்து கொரோனா விதிகளின்படி நேற்று அவரது உடல் சொந்த கிராமத்தில் புதைக்கப்பட்டது.