கருமந்துறை பேக்கரியில் தீ விபத்து

கருமந்துறை பேக்கரியில் தீ விபத்து.;

Update: 2021-04-25 22:38 GMT
பெத்தநாயக்கன்பாளையம்,

கருமந்துறை பகுதியில் தனியார் பேக்கரி மற்றும் பாஸ்ட் புட் கடை இயங்கி வருகிறது. சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு உரிமையாளர் வீட்டுக்கு சென்று விட்டார். திடீரென இரவு 2 மணியளவில் கடையின் உள்ளே வெடி வெடிப்பது போன்று சத்தம் கேட்டது. 
மேலும் கடைக்குள் தீ மளமளவென பரவி பேக்கரியின் உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் எரியத் தொடங்கின. உடனடியாக கருமந்துறை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த கியாஸ் சிலிண்டரும் வெடித்து சிதறி பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்