மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது

கடையநல்லூர் அருகே வடகரையில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

Update: 2021-04-25 21:25 GMT
அச்சன்புதூர், ஏப்:
வடகரை, அச்சன்புதூர், கடையநல்லூர், இடைகால், சொக்கம்பட்டி, பண்பொழி, இலத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுன் கூடிய மிதமான மழை பெய்தது. இதில் வடகரை பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. 
கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசிய நிலையில் நேற்று பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்