மோட்டார்சைக்கிள்கள் மோதல்; லாரி டிரைவர் பலி
பாவூர்சத்திரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
பாவூர்சத்திரம், ஏப்:
பாவூர்சத்திரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
லாரி டிரைவர்
பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலபட்டணத்தில் வசித்தவர் சேகர் மகன் பிரதீபன் (வயது 27). லாரி டிரைவர். இவருடைய மனைவி கீர்த்தி (24). இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பிரதீபன் பாவூர்சத்திரத்தில் இருந்து அடைக்கலபட்டணத்துக்கு மோட்டார் ைசக்கிளில் சென்று ெகாண்டிருந்தார்.
பாவூர்சத்திரத்தை அடுத்த மகிழ்வண்ணநாதபுரம் குளம் அருகில் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ேமாதியது.
பரிதாப சாவு
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரதீபனை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு ெசன்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்ைச அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று பிரதீபன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பிரதீபனுக்கு சொந்த ஊர், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல பட்டமுைடயார்புரம் ஆகும்.