செம்மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது

கடையம் அருகே செம்மண் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரையும் கைது செய்தனர்.

Update: 2021-04-25 21:08 GMT
கடையம், ஏப்:
கடையம் அருகே மேல மாதாபுரத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன், தனிப்பிரிவு ஏட்டு ஆனந்த், மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். விசாரணையில், மேட்டூரை சேர்ந்த யோவான் ராஜதுரை மகன் தங்கராஜ் (வயது 30) என்பதும், அனுமதி இல்லாமல் லாரியில் செம்மண் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்கராஜை கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஜே.சி.பி. டிரைவர் அரியபுரம் சீதாராமன்பட்டியை சேர்ந்த சங்கரையா மகன் சாமி, ஜே.சி.பி உரிமையாளர் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த தாவீது ரூபன் ஆகியோரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்