லாரி டிரைவரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
லாரி டிரைவரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி இந்திரா நகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது 39). லாரி டிரைவர். இவருடைய அக்காள் அமிர்தவள்ளி கீழக்கணவாய் கிராமத்தில் வசித்து வருகிறார். அமிர்தவள்ளியின் மூத்த மகன் சந்துருவை (19), அதே பகுதியை சேர்ந்த மாசி மகன் பார்த்திபன் (19) என்பவர் முன்விரோதம் காரணமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து தட்டிக்கேட்க சென்ற மதியழகனை, பார்த்திபன் மற்றும் 16, 17 வயதுடைய 2 சிறுவர்கள் உள்பட சிலர் சேர்ந்து தாக்கியதாகவும், மேலும் அவர்கள் மதியழகனை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மதியழகன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், பார்த்திபன், 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடி வருகி்ன்றனர்.