அரியலூர்:
அரியலூரில் ேநற்று ெரயிலை தவிர அனைத்து போக்குவரத்தும் முடங்கிப்போனது. அரியலூர் ெரயில் நிலையத்திற்கு மலைக்கோட்டை விரைவு ெரயில், காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன், மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை அதிவிரைவு ெரயில்கள், சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் சேது விரைவு ெரயில், குருவாயூர் விரைவு ெரயில்கள் இரு மார்க்கத்திலும் என நேற்று வழக்கம்போல் ரெயில்கள் சென்று வந்தன. பல்லவன், வைகை அதி விரைவு ெரயில்களில் பயணிக்க தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, சுவாமிமலை ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கானோர் அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சென்னை சென்று திரும்புவார்கள். ஆனால் நேற்று மிக குறைந்த அளவே பயணிகள் வந்து சென்றனர். ெரயில் நிலையத்திற்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயக்கப்படாமல், நிறுத்தப்பட்டு இருந்தன.