நெல்லையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி
நெல்லையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, அரசு சிகிச்சை மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 299-ஆக உயர்ந்துள்ளது. நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த மாநகராட்சி பகுதியை சார்ந்த 71 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.