விக்கிரமசிங்கபுரத்தில் சுகாதார பணிகள் தீவிரம்
விக்கிரமசிங்கபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம், ஏப்:
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தீவிரமாக சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி ஆணையாளர் காஞ்சனா உத்தரவின்படி நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் தலைமையில் பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிறுத்தம், ஏ.டி.எம். மையம் மற்றும் மெயின் ரோடு ஆகிய இடங்களில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடரை தெளித்தனர்.