முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய பாபநாசம் கோவில்

முழு ஊரடங்கு காரணமாக பாபநாசம் கோவில் வெறிச்சோடியது.

Update: 2021-04-25 20:36 GMT
விக்கிரமசிங்கபுரம், ஏப்:
பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். சுற்றுலா தலமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளும், பல்வேறு ஊர்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் வருகை தருவது வழக்கம்.
தற்போது கொேரானா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நேற்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன் காரணமாக நேற்று ஆட்கள் இல்லாமலும், திருமண நாளாக இருந்தும் இங்கு திருமணம் நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்றாலும் கோவிலுக்குள் பக்தர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு கோவிலில் முன் கதவு அடைக்கப்பட்டுள்ளது. மேலும் தாமிரபரணி நதிக்கரையில் யாரும் நீராடாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்