கொரோனா தொற்றுக்கு வக்கீல் பலி
கொரோனா தொற்றுக்கு வக்கீல் பரிதாபமாக இறந்தார்
வாடிப்பட்டி
வாடிப்பட்டியைச் சேர்ந்த 68 வயதான மூத்த வழக்கறிஞர் ஒருவர் நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் காரணமாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து மருத்துவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். தற்போது அவருக்கு எடுத்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.