திருச்சி விமான நிலையத்தில் இருந்து குறைந்த பயணிகளுடன் இயங்கிய உள்நாட்டு விமானங்கள்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து குறைந்த பயணிகளுடன் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.

Update: 2021-04-25 20:15 GMT
செம்பட்டு, 
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் விமான சேவை எந்தவித தடையும் இன்றி வழக்கம் போல் இயங்கியது. உள்நாட்டு விமானத்தில் அதிகபட்சம் 80 பயணிகள் பயணிக்க முடியும். ஆனால் குறைந்த அளவே பயணிகளே பயணம் செய்தனர். 
குறிப்பாக நேற்று சென்னையிலிருந்து காலை 10.45 மணிக்கு 31 பயணிகளுடன் திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானம், 31 பயணிகளுடனே காலை 11.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதுபோல் மதியம் 1.50 மணிக்கு சென்னையில் இருந்து 54 பயணிகளுடன் வந்த விமானத்தில், திருச்சியில் இருந்து 44 பயணிகளே சென்னைக்கு சென்றனர். இதுபோல் பெங்களூருவில் இருந்து மாலை 5.35 மணிக்கு 49 பயணிகளுடன் வந்த விமானத்தில், திருச்சியில் இருந்து 24 பயணிகள் மட்டுமே பெங்களூருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்