மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்-வெள்ளிப்பாளையம் ரோட்டில் தனியார் தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் ஒடிசாவை சேர்ந்த ராம்லுகர் (வயது 49) தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவருடைய மகளுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவர் தனது குழந்தையுடன் வேறு ஒருவருடன் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராம்லுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.