கும்பகோணத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம்:-
கும்பகோணம் பகுதிகளில் செல்போன் மூலமாக வாடிக்கையாளர்களை அழைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய்க்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கஞ்சா விற்பனை செய்து வந்த மேலக்காவேரி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது40), மந்திரி சந்து பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (23), கல்யாணராமன் தெருவை சேர்ந்த தினேஷ் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.