முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.
சிவகங்கை
சிவகங்கை நகரில் பெட்ரோல் பங்க், மருந்துகடைகள், பால்கடை, தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, கார், வேன், பஸ் போன்றவைகள் ஓடவில்லை தனியார் பஸ்கள் பெட்ரோல் பங்குகளில் நிறுத்தி வைக்கபட்டன. பஸ்நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்ேசாடி கிடந்தது. தியேட்டர்கள், மால், மற்றும் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பஸ்நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்தியவாசிய பணிக்கு செல்பவர்கள் அடையாளஅட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கையில் போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்ட சாலையில் சிறுவர்கள் கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
காரைக்குடி"
குறைந்தளவில்ஆள் நடமாட்டமும் இருந்தது. ஆங்காங்கே ஒருசிலர் இருசக்கர வாகனங்களில் சென்ற வண்ணம் இருந்தனர். அரசு உத்தரவுப்படி கோவில்கள், வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருந்ததால் குன்றக்குடி, ஜெயங்கொண்டான், கானாடுகாத்தான் பகுதிகளில் கோவில்கள் வாசலிலேயே மணமக்களும் அவர்களது குடும்பத்தினர்களும் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் திருமணங்கள் நடைபெற்றன. புரோகிதர் இன்றி, மேளதாளம் இன்றி முக கவசம், கிருமிநாசினியுடன் திருமணங்கள் நடைபெற்றது.
காரைக்குடியில் திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமணங்களை போலீசார் கண்காணித்து அரசு உத்தரவினை நினைவூட்டும் விதமாக, கலந்து கொள்வோர் எண்ணிக்கை, சமூக இடைவெளி மற்றும் முக கவசம் ஆகியவற்றை பின்பற்றுகிறார்களா? என கண்காணித்தனர். திருமணத்தில் கலந்து கொள்ள வாகனங்களில் வந்தோரை ஆங்காங்கே போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் திருமண அழைப்பிதழை பார்த்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அவர்களை திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதித்தனர்.
2 பேருக்கு கொரோனா
எஸ்.புதூர்
முழு ஊரடங்கையொட்டி எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள், மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புழுதிபட்டி பகுதி சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய பணிகள் மற்றும் விவசாய பணிக்கு மட்டுமே வாகனங்கள் இயங்கின. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு தங்களுடைய பங்களிப்பை வியாபாரிகள் வழங்கினர். கல்லல் மற்றும் மதகுபட்டி பகுதிகளிலும் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. காளையார்கோவிலிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடின.
திருப்புவனம்
சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.