தர்மபுரி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் சாவு

தர்மபுரி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் இறந்தான்.

Update: 2021-04-25 17:09 GMT
தர்மபுரி:
தர்மபுரி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மகன் மனோஜ் (வயது 17). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மனோஜ் தனது நண்பர்களுடன் பிடமனேரியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றான். அங்கு மனோஜ் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுபற்றி தகவல் அறிந்ததும் தர்மபுரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்