திருச்செந்தூரில் நடிகை புவனேஸ்வரி மகன் திருமணம்
திருச்செந்தூரில் நடிகை புவனேஸ்வரி மகன் திருமணம் எளிமையாக நடந்தது.
திருச்செந்தூர்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவி வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற இருந்த பெரும்பாலான திருமணங்கள் அவர்களின் சொந்த ஊர்களில் நடந்தது.
ஓரிரு திருமணங்கள் உறவினர்கள் இல்லாமல் திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில் பகுதியில் நடந்தது. அதேபோல் திரைப்பட நடிகை புவனேஸ்வரி மகன் மிதுன் சீனிவாசனுக்கும், மகேந்திரி என்பவருக்கும் நேற்று காலை மிக எளிமையான முறையில் தூண்டிகை விநாயகர் கோவில் முன்பு திருமணம் நடைபெற்றது.