தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 997 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 85 பேர் நேற்று குணமாகினர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 17 ஆயிரத்து 625 பேர் மீண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,161 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் கடமலை-மயிலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.