6 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 6 வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-25 15:14 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. 

மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களை கண்காணிக்கவும் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்த குழுவில் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி, வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர். 

இவர்கள் நேற்று திண்டுக்கல்லில் உள்ள தியேட்டர்கள், வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் 6 வணிக நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.21 ஆயிரத்து 200-ஐ அபராதமாக விதித்தனர்.

மேலும் செய்திகள்