ஒரே நாளில் மேலும் 228 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 228 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் 56 பேர் பெண்கள் ஆவார்கள். இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அதேநேரம் 121 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
மேலும் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்து 698 ஆக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி 1,576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.