தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2021-04-25 13:36 GMT
மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெல் கரும்பு மக்காச்சோளம், தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழை காரணமாக மடத்துக்குளம் பகுதியில் தடுப்பணைகளில் மழைநீர் தேங்கி    நிற்கிறது. இந்த நிலையில் தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் குறித்து விவசாயிகள் கூறும்போது மடத்துக்குளம் பகுதியில் வருடந்தோறும் கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது நீர்நிலைகளில் தடுப்பணைகள் கட்டப்பட்ட பின்னர் தடுப்பணைகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லமுடிகிறது. இதனால் விவசாய பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்  என்றனர். மேலும் தடுப்பணைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்