கூடலூர் பகுதியில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கூடலூர் பகுதியில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் பகுதி விவசாயிகள் கடந்த சில வருடங்களாக தென்னைமரங்களை அழித்துவிட்டு ஒட்டுரக திசுவாழைகளை சொட்டுநீர்பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். ஒருவருட பயிரான வாழை சாகுபடிக்கு குறைந்தளவு வேலையாட்களே போதுமானது. மேலும் விவசாயிகள் வாழையில் ஊடுபயிராக வெங்காயம், மல்லி, தக்காளிகளை சாகுபடி செய்து அதிக லாபம் பெற்று வருகின்றனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் வாழை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.