திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 7 பேர் பலி - 793 பேருக்கு பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 7 பேர் பலியாகினர். மேலும் 793 பேருக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-04-25 10:51 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 793 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 54 ஆயிரத்து 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 49 ஆயிரத்து 474 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

அதில், 4 ஆயிரத்து 562 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 754 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்