கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ‘திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 நாட்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சைக்கு வர வேண்டாம்’ - மாவட்ட கலெக்டர் பொன்னையா தகவல்
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ‘திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 நாட்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சைக்கு வர வேண்டாம்’ என மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்,
திருவள்ளுர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பாக திருவள்ளுர் அரசு மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் காரணத்தினாலும், ஆஸ்பத்திரியில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி, வருகிற 26-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை 10 நாட்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது என அறிவிக்கப்படுகிறது.
புறநோயாளிகள் அவர்கள் பகுதியின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அல்லது கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ தங்களை பரிசோதித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அவசர சிகிச்சை பிரிவும், பிரசவங்களும் மேற்படி அரசு ஆஸ்பத்திரியிலே வழக்கம்போல் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.