சேலத்தில் போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சேலத்தில் போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

Update: 2021-04-25 00:08 GMT
சேலம்,

சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் லோகு (வயது 50). இவரது மனைவி தேவி (45). இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகு, தனது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தேவி புகார் செய்தார். அதன்பேரில் நேற்று காலை விசாரணைக்கு வருமாறு லோகு, தேவி ஆகிய இருவரையும் போலீசார் அழைத்திருந்தனர். அதன்படி நேற்று கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்த தேவி, திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து காப்பாற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்