மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

குடிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது;

Update: 2021-04-24 21:57 GMT
குடிமங்கலம்
பொன்னேரி அய்யம்பாளையம்புதூரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது 32). ஜெயபிரகாஷ் பொன்னேரியில் தோட்டத்துசாளையில் வசித்து வருகிறார்.  சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தை தோட்டத்துசாளையில் நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார். இரவு நேரத்தில்  வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் வெளியில் கதவை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். ஜெயபிரகாஷ் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது.
 இதுகுறித்து குடிமங்கலம் போலீசில் ஜெயபிரகாஷ் புகார் தெரிவித்தார். குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் குடிமங்கலம் நால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான நிலையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தை பிடித்து விசாரணை நடத்தியதில் பொன்னேரியில் ஜெயபிரகாஷ் என்பவருக்கு சொந்தமான வாகனத்தை திருடியது திண்டுக்கல் மாவட்டம் பழனி வி.கே.மில் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் விக்கி என்ற கில்டன் (20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்