வீரகனூர் பேருராட்சியில் முக கவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்

முக கவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்

Update: 2021-04-24 21:54 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி பேரூராட்சிக்குட்பட்ட வீரகனூர் பஸ் நிலையம், வணிக வளாகம், வீரகனூர் சந்தை மற்றும் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என செயல் அலுவலர் வெங்கடாஜலம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது முக கவசம் அணியாத 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்