சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியசாமி கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்

Update: 2021-04-24 21:53 GMT
சூரமங்கலம்:
சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு நேற்று இரவு  என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர். பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ரங்கசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
20 நிமிட பூஜைக்கு பின்னர், ரங்கசாமி கோவில் முழுவதும் வலம் வந்து வணங்கினார். பின்னர் அவர் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்