நெல்லையில் மேலும் 525 பேருக்கு கொரோனா; பெண்கள் பலி

நெல்லையில் நேற்று மேலும் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பெண்கள் பலியானார்கள்.

Update: 2021-04-24 21:25 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதுடன், அதனால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் 2️ பெண்கள் கொரோனாவுக்கு பலியானார்கள். கடந்த 16-ந் தேதி 55 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார். இதேபோல் கடந்த 22-ந் தேதி நெல்லையைச் சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 229-ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 97 பேர் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்