இன்று முழுஊரடங்கு: நெல்லையில் காய்கறி, இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்

நெல்லையில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகளில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2021-04-24 21:08 GMT
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி பொதுமக்கள் இன்றைய தேவைக்கான பொருட்களை நேற்று வாங்கி சேமித்து வைத்தனர்.  அதாவது காய்கறிகள், இறைச்சி மற்றும் மளிகை பொருட்களை வாங்க கடைகளில் குவிந்தனர்.  இதனால் நெல்லை டவுன் ரத வீதிகள், மாடவீதி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, மகாராஜநகர் உழவர்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்பட்டது. அவர்கள் காய்கறிகள், மீன், ஆடு கோழி இறைச்சிகளை வாங்கி சென்றனர்.  இதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


மேலும் செய்திகள்