பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் கிடந்த கிருஷ்ணர் சிலை

பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் கிருஷ்ணர் சிலை கிடந்தது. அதை கொண்டுவந்து போட்டது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-04-24 20:44 GMT
பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் கிருஷ்ணர் சிலை கிடந்தது. அதை கொண்டுவந்து போட்டது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
சாமி சிலை 
பவானிசாகர் அருகே உள்ளது எரங்காட்டூர். இந்த கிராமத்தின் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் நேற்று மாலை அந்த பகுதி மக்கள் வழக்கம் போல் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கரையோரத்தில் சாமி சிலை ஒன்று இருந்ததை பார்த்தனர். உடனே இதுகுறித்து கிராம மக்கள் பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.
கிருஷ்ணர்
அதைத்தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அது கிருஷ்ணர் சிலை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிலையை மீட்டு சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார், கிருஷ்ணர் சிலை வாய்க்கால் கரைக்கு எப்படி வந்தது? அது எந்த உலோகத்தால் செய்யப்பட்டது?, அதை கொண்டுவந்து போட்டது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கீழ்பவானி வாய்க்காலில் கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்