விஷம் குடித்து வக்கீல் தற்கொலை
மணவாளக்குறிச்சி அருகே வக்கீல் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி
மணவாளக்குறிச்சி அருகே வக்கீல் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வக்கீல்
மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் கன்னிவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (வயது 35). இவர் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தனது தாயுடன் வசித்து வந்தார். சுமார் 8 மாதங்களுக்கு முன் வயிற்றுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்த புண் இன்னமும் ஆறவில்லை என கூறப்படுகிறது. இதனால் அனிஷ் மனம் உடைந்து காணப்பட்டாராம்.
விஷம் குடித்து தற்கொலை
நேற்று காலையில் மாடிக்கு சென் அனிஷ் நீண்ட நேரம் ஆகியும் கீழே இறங்கி வரவில்லை. அவருடைய தாய் சுலோச்சனா மாடிக்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னல் வழியாக ஒரு கம்பியின் உதவியால் உள்பக்கமாக போடப்பட்டு இருந்த கொண்டியை எடுத்தனர்.கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் அனிஷ் இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து தாய் சுலோச்சனா கதறி அழுதார். தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து அனிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வக்கீல் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.