இன்று முழு ஊரடங்கு எதிரொலி: தொலைதூர பஸ்களில் பயணிகள் கூட்டம்

இன்று முழு ஊரடங்கு என்பதால் தொலைதூர பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Update: 2021-04-24 20:05 GMT
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தொலை தூரம் செல்லும் பஸ்கள் அதிகாலை 4 மணியில் இருந்து மதிய நேரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால், பஸ்கள் இயக்கப்படாது. எனவே வெளியூர் செல்ல வேண்டிய மக்கள் நேற்று காலையிலேயே பஸ் நிலையங்களில் குவிய தொடங்கினார்கள். ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அதிகமான பஸ்கள் இயக்கப்பட்டன.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு நேரத்தில் ஊரடங்கு உள்ளதால், பகல் நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் நின்று கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகள் ஏறியதும், பஸ்கள் புறப்பட்டன.

மேலும் செய்திகள்