காய்கறி சந்தையில் பொதுமக்கள் குவிந்தனர்
முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறி சந்தையில் பொதுமக்கள் குவிந்தனர்;
ஊரடங்கை முன்னிட்டு நேற்று காய்கறி சந்தையில் பொதுமக்கள் குவிந்தனர். கொரோனா வைரஸ் 2-ம் அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் கொரோனா பரவலை தடுக்கவும் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு கடந்த 20-ந் தேதி முதல் அமலில் உள்ளது. அதுபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு நேற்று கடைகளில் அதிக கூட்டம் இருந்தது. குறிப்பாக வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ள காய்கறி சந்தையில் ஏராளமானவர்கள் குவிந்தனர்.
பலர் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற மாநகராட்சி பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்து பணியில் ஈடுபட்டனர்.