காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 48) இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டுமுன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய அவர் புறப்பட்டுச் சென்றபோது வழியில் தனது மோட்டார் சைக்கிளை 2 பேர் தள்ளிக் கொண்டு போவதைக் கண்டார். உடனடியாக அவர்களை வழிமறித்து பிடிக்க முற்பட்டபோது ஒருவன் தப்பி ஓடிவிட்டான். மற்றொருவன் பிடிபட்டான். பிடிபட்டவன் பெயர் திருப்பதி (வயது19) காளவாய்பொட்டல் பகுதியை சேர்ந்தவன். திருப்பதி வடக்கு போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் திருப்பதி மீது மோட்டார் சைக்கிளை திருடியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொருவனை தேடி வருகின்றனர்.