இரவு 10 மணிக்கு மேலும் வீடியோ, புகைப்படக்காரர்களை அரசு அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை

இரவு 10 மணிக்கு மேலும் வீடியோ, புகைப்படக்காரர்களை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-04-24 19:29 GMT
திருச்சி,
திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் சங்க தலைவர் நிக்சன் சகாயராஜ் தலைமையில் சங்க நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், திருச்சி மாவட்டத்தில் எங்கள் சங்கத்தில் 1,200 உறுப்பினர்கள் உள்ளனர். எங்களது வாழ்வாதாரமே முகூர்த்த தினங்களில் நடக்கும் திருமணம் மற்றும் பொது நிகழ்வுகளை நம்பிதான் உள்ளது. மேலும் பெரும்பாலான முகூர்த்த தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளிலும், இரவு 10 மணிக்கு மேலும் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துவிட்டு வரும் கலைஞர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்