இணைப்பு பயிற்சி பாட புத்தகங்களை மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள்
இணைப்பு பயிற்சி பாட புத்தகங்களை மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அரசு பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர்.;
வையம்பட்டி,
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கடந்த ஒரு ஆண்டாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது, 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்குப் பிரிட்ஜ் கோர்ஸ் என்று அழைக்கப்படும் “இணைப்பு பயிற்சி பாட புத்தகங்கள்” வழங்கப்பட்டன. இதில் பலர் அந்த புத்தகத்தை பெறாமல் இருந்தனர். இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி முதல் கல்வி தொலைக்காட்சியில் அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் இணைப்பு பாடப்பயிற்சி சார்ந்த காணொலிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இணைப்பு பயிற்சி பாடபுத்தகங்கள் சென்று சேர ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணன் ஆலோசனையின் பேரில் பள்ளி ஆசிரியர்கள் பல குழுக்களாக பிரிந்து மாணவ-மாணவிகளின் வீட்டிற்கே சென்று இணைப்பு பயிற்சி பாடப் புத்தகங்களை வழங்கினர். மேலும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்ற இணைப்பு பயிற்சி பாடம் சார்ந்த காணொலிகளின் கால அட்டவணையை அவர்களுக்கு தந்து அப்பாடங்களைக் கண்டு உணர்ந்து கற்பதற்கும் அறிவுறுத்தியதோடு அதனை உறுதி செய்ய அவ்வப்போது சில மாணவ-மாணவிகளின் வீட்டிற்குச் சென்று அவர்களும் அப்பாடங்களை தாமும் கண்டு மாணவ- மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.