மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-04-24 18:01 GMT
புதுக்கோட்டை, ஏப்.25-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 65 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 208 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 683 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது. அரிமளம் ஒன்றியத்தில் அரிமளம் பேரூராட்சி செட்டி ஊரணி பகுதியை சேர்ந்த 65 ஆண், 14 வயது ஆண், 37 வயது பெண், கடியாபட்டி கன்னிதோப்பு கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண், அரிமளம் பகுதியை சேர்ந்த 59 வயது பெண், 38 வயது பெண், 59 ஆண், பெருங்குடி கிராமத்தை சேர்ந்த 55 பெண் ஆகிய 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விராலிமலை தாலுகா இராஜாளிப்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கிராமத்தில் சுகாதார நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்