களை கட்டிய மீன் பிடி திருவிழா
மேலூர் அருகே களை கட்டிய மீன் பிடி திருவிழா
மேலூர், ஏப்.
மேலூர் அருகே உலகுப்பிச்சன்பட்டியில் உள்ள வாகுடி கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பழையூர், வெள்ளமுத்தம்பட்டி, உலகுபிச்சம்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கண்மாயில் வலை விரித்து கட்லா, வட்டச்சுழி, கெண்டை உள்ளிட்ட மீன்வகைகளை பிடித்தனர். ஒருவருக்கொருவர் தாங்கள் பிடித்த மீன்களை மகிழ்ச்சியுடன் தூக்கி காண்பித்து கொண்டனர். மீன் கிடைக்காதவர்களுக்கும் அக்கம், பக்கத்தினர் தாங்கள் பிடித்த மீன் வகைகளை கொடுத்து மகிழ்ந்தனர். களை கட்டிய மீன்பிடி திருவிழாவை பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
அதன்பின்னர் பிடிபட்ட மீன்களை தங்கள் வீட்டுக்கு எடுத்து சென்று குழம்பு வைத்து சாப்பிட்டனர். இதனால் உலகுப்பிச்சன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது. அக்கம், பக்கத்தினருக்கு மீன் குழம்பு கொடுத்து மகிழ்ந்தனர்.