ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 105 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 7 ஆயிரத்து 476 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 565 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 140 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் ஒன்று முதல் 10 இடத்திற்குள் இருந்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து நேற்று 100 எண்ணிக்கையை கடந்து 105 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.