பந்தல் காண்டிராக்டருக்கு கத்திக்குத்து

பந்தல் காண்டிராக்டருக்கு கத்திக்குத்து

Update: 2021-04-24 16:56 GMT
பந்தல் காண்டிராக்டருக்கு கத்திக்குத்து
துடியலூர்

கோவை கஸ்தூரி நாயக்கன்புதூர் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் பந்தல் காண்டிராக்டர். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (வயது 22 ) என்பவர் வேலை செய்து வந்தார்.  
பந்தல் அமைத்த பணத்தை சுகுமார் கந்தசாமியிடம் கொடுக்க வில்லை என்று தெரிகிறது.  

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுகுமார் கந்தசாமியை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. 

இதில் காயமடைந்த கந்தசாமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தடாகம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்