முககவசம் அணியாத 139 பேருக்கு அபராதம்
முககவசம் அணியாத 139 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கமுதி,
கமுதி பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா உத்தரவில் போலீசார் நடத்திய சோதனையில் முககவசம் அணியாத கமுதியை சேர்ந்த 52 பேர், மண்டலமாணிக்கத்தில் 12 பேர், கோவிலாங்குளத்தில் 4 பேர், பெருநாழியில் 10 பேர், அபிராமத்தில் 30 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப் பட்டது. இதேபோன்று சுகாதாரத்துறையினர் கண்காணிப்புக் குழுவினருடன் திடீர் சோதனை நடத்தி கமுதி பேரூராட்சி பகுதியில் 10 பேருக்கும், அபிராமம் பேரூராட்சி பகுதியில் 12 பேருக்கும், கிராம பகுதி 9 பேருக்கும் தலா ரூ. 200 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது.