மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-04-24 16:31 GMT
கமுதி, 
அபிராமம் போலீஸ் சரகம் மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் சாலை பணியாளர் திருக்கண்ணன். இவரது மனைவி வள்ளி (வயது50). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். கணவன,் மனைவியும் கமுதியில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அகத்தாரிருப்பு செந்தூர் முத்தையா (47) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் வள்ளி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தார். உடனே அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே வள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சத்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்