தாராபுரத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
தாராபுரத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
தாராபுரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் தாராபுரத்தில் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சப்-கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்தும் விளக்கினார். அதில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் முகவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும், செல்போன் கொண்டு செல்லக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். ஆலோசனைக்கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, நேர்முக உதவியாளர் கிருஷ்ணவேணி, தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் தாராபுரம் தொகுதி அனைத்து கட்சியின் வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.