வெள்ளகோவிலில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
வெள்ளகோவிலில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
வெள்ளகோவில்
வெள்ளகோவில் தீயணைப்பு துறை சார்பில், நிலைய அதிகாரி தனசேகர் தலைமையில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. விபத்து காலங்களில் தங்களையும் மற்றும் இதர உடைமைகளையும், பொருட்களையும் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது, எப்படி தடுப்பது பற்றி செயல்முறை விளக்க பயிற்சி வழங்கினர், இதில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டனர்.