தூத்துக்குடியில் 388 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி, ஏப்:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று 388 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 444 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 17 ஆயிரத்து 664 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரத்து 633 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 147-ஆக உயர்ந்து உள்ளது.