லாரி மோதி புதுமாப்பிள்ளை பலி

திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரி மோதி புதுமாப்பிள்ளை பலியானார்.;

Update: 2021-04-24 16:02 GMT
தொண்டி, 
திருவாடானை தாலுகா, ஓரியூர் திட்டை பகுதியை சேர்ந்தவர் லூர்து ஆல்வின் (வயது31). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் திருமண வேலைகளை மும்முரமாக செய்து வந்துள்ளார். இந்தநிலையில் தனது நண்பருக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஓரியூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தொண்டிக்கு சென்றுள்ளார். வட்டானம் சோதனை சாவடி அருகே சென்றபோது இவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையை ஒட்டியுள்ள பகுதியில் மயங்கி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த லூர்து ஆல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த லாரி டிரைவர்  பாலகுரு (37) என்பவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்