திருப்பூரில் வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வங்கி மூடப்பட்டது.

திருப்பூரில் வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வங்கி மூடப்பட்டது.

Update: 2021-04-24 15:55 GMT
திருப்பூர்
திருப்பூரில் வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வங்கி மூடப்பட்டது. மேலும், ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
3 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் டவுண்ஹால் அருகே நேருவீதி பகுதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் 15-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே கடன் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் 2 பேர் மற்றும் கணக்காளர் ஒருவர் என 3 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதனால் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
12 பேருக்கு பரிசோதனை
இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் கொரோனா சிகிச்சை பெறுவதற்காக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையே பாதுகாப்பு கருதி வங்கி மூடப்பட்டது. இதுபோல் வங்கியில் வேலை செய்து வரும் மற்ற 12 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வங்கி மூடப்பட்டுள்ளது. இதனால் வங்கி முன்பு இது தொடர்பான விளம்பர பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு வந்து செல்கிற பொதுமக்களும் ஏமாற்றத்துடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்